×

கந்தசஷ்டி அவமதிப்பு : பரிகாரமாக தமிழகம் முழுவதும் இன்று பூஜை நடத்தும் பாஜக!

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலை சேர்ந்தவர்கள் கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டனர். அவர்களின் இந்த கொடுஞ்செயலை கண்டித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த கறுப்பர் கூட்டம் அலுவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முருகப்பெருமானை போற்றும்
 

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலை சேர்ந்தவர்கள் கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டனர். அவர்களின் இந்த கொடுஞ்செயலை கண்டித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த கறுப்பர் கூட்டம் அலுவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

முருகப்பெருமானை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் நடைபெற்ற சம்பவத்தை எதிர்த்து, பாஜக சார்பில் பல்வேறு போராட்டங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் இன்று முருகனை வழிபடும் விதமாக தமிழகம் முழுவதிலும் வீடுகளில் வேல்பூஜை நடத்த பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் அழைப்பு விடுத்திருந்தார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதால் தமிழர்கள் வேதனையில் இருப்பதாகவும், பல்வேறு முருகப்பெருமான் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று மாலை 6 மணிக்கு மக்கள் தங்களது வீடுகளில் முருகனின் படத்தை வைத்து வேல் பூஜை நடத்த வேண்டும் என தான் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வேல் பூஜையை முன்னெடுத்து நடத்தும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, பாஜக அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவர் ரா.அர்ஜுனமூர்த்தி நேற்று வேல் கொடுத்து வேல் பூஜையை துவக்கி வைத்தார். அதன் படி இன்று மாலை 6 மணிக்கு தமிழகம் முழுவதிலும் பாஜக சார்பில் வேல் பூஜை நடைபெற உள்ளது. மேலும் இன்று முருகப்பெருமானுக்கு உகந்த நாளான சஷ்டி என்பது நினைவுகூரத்தக்கது.