×

“மனநலம் பாதித்த ஒருவரின் செயல்…” : வீரமணி கண்டனம்!

தஞ்சை ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அறிவிக்கப்பட்டதற்கு வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் சிலர் காவித்துண்டு அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உருவம் தெரிந்ததாக தெரிகிறது. இதனால் அப்பெண் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தரா?அல்லது வேறு நபர்களின்
 

தஞ்சை ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அறிவிக்கப்பட்டதற்கு வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் சிலர் காவித்துண்டு அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உருவம் தெரிந்ததாக தெரிகிறது. இதனால் அப்பெண் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தரா?அல்லது வேறு நபர்களின் செயலா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “வழக்கம்போல் மனநலம் பாதித்த ஒருவரின் செயல் என திசை திருப்பினால் மக்களின் கடும் எதிர்ப்பு வெடிப்பது உறுதி. மதவாத, சாதிய கூட்டத்திற்கு தக்க பாடம் கற்பிப்போம்” என்றும் கூறியுள்ளார்.