×

அதிமுகவில் இருக்கும் பலர் திமுகவுடன் கள்ள உறவு: வைத்திலிங்கம்

சோழமண்டல தளபதி என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று அமைச்சரானார். இதனை தொடர்ந்து நடைபெற்ற 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு தேர்தலிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தழுவினார். ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். இருப்பினும் அவரை சமாதான படுத்த ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கி ஊக்கப்படுத்தினார் ஜெயலலிதா. அந்த அளவு ஜெயலலிதாவின் பாசத்துக்கு சொந்தக்காரர். ஆனால் இபிஎஸ்,
 

சோழமண்டல தளபதி என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று அமைச்சரானார். இதனை தொடர்ந்து நடைபெற்ற 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு தேர்தலிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தழுவினார். ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். இருப்பினும் அவரை சமாதான படுத்த ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கி ஊக்கப்படுத்தினார் ஜெயலலிதா. அந்த அளவு ஜெயலலிதாவின் பாசத்துக்கு சொந்தக்காரர். ஆனால் இபிஎஸ், ஓபிஎஸ் கைக்கு கட்சிக்கு வந்த பின் வைத்திலிங்கம் ஓரங்கட்டப்பட்டார். இதனால் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் வைத்திலிங்கம், தனது ஆதரவாளர்கள் இதுகுறித்து புலம்பி தவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளா்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், “கட்சியில் இருக்கும் பலா் தி.மு.க.வுடன் ஏதோ ஒரு வகையில் டைஅப்பில் இருக்கிறீா்கள் . இதை நான் பேசக் கூடாது என நினைக்கிறேன் . ஆனாலும் பேசாமல் இருக்க முடியவில்லை. கட்சியின் மேல் மட்டத்தில் இருப்பவா்கள் தி.மு.க.வுடன் ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொண்டு இருக்கிறீா்கள் . அப்படி இருந்தால் நம் கட்சியை அடிமட்டத்தில் இருக்கும் தொண்டன்
எப்படி நம்புவான் ? எனவே , திமுகவுடன் வைத்திருக்கும் கள்ள உறவைத் துண்டிக்கப் பாருங்கள்” என கூறியுள்ளார்.