×

ராகுல் காந்திக்கு கோயிலில் உட்காரக்கூட  தெரியாது.. யோகி ஆதித்யநாத் தாக்கு

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு உட்காரக்கூட தெரியாது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தாக்கினார்.

உத்தர பிரதேசம் அமேதி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: அமேதியின் முன்னாள் எம்.பி.க்கு (ராகுல் காந்தி) கோயிலில் உட்காரக்கூட  தெரியாது. அவர் சென்றிருந்த கோயிலின் அர்ச்சகர் அவருக்கு எப்படி உட்கார வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும். ராகுல் காந்திக்கு இந்து மதம், இந்துத்துவம் என்றால் என்ன என்று தெரியவில்லை, அவர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். 

கொரோனா காலத்தில் சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தலைவர் அல்லது எம்.எல்.ஏ. வெளியே வரவில்லை. அவர்களின் (கட்சிகள்) தேசிய தலைவர் முதல் பொது தொண்டர்கள் வரை யாரும் பொதுமக்களுக்காக நிற்கவில்லை. தேர்தல் வந்தவுடன் அவர்கள் இங்கு வருவார்கள், தேர்தல் முடிந்ததும் நான்கரை ஆண்டுகள் காணாமல் போய்விடுவார்கள் மீண்டும் பார்க்க மாட்டார்கள். பிரித்தாளும் அரசியலையும், பிரிவினையையும் எப்போதும் கடைப்பிடிப்பவர்கள் அவர்களின் மரபணுக்களின் ஒரு பகுதியாகும். அவர்களின் முன்னோர்கள் நாங்கள் தற்செயலாக இந்துக்கள் இன்று கூறினர். அவர்கள் தங்களை இந்துக்கள் என்று அழைக்க முடியாது. 

நாங்கள் எதையும் மறைக்கவில்லை. எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் முதல்வராக இல்லா போது அன்றும் இதைத்தான் சொன்னேன், இன்றும் இதை சொல்கிறேன், எப்போதும் சொல்வேன் நாம்  இந்துக்கள் என்று எல்லோரும் பெருமையாக சொல்லிக் கொள்ள வேண்டும் நாட்டில் வகுப்புவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வந்து, இந்த நாட்டின் இந்துக்களை சிறையில் அடைக்க நினைத்தனர். அவர்களின் நம்பிக்கையுடன் விளையாட நினைத்தனர். தேர்தலின் போது தங்களை இந்து என்று அழைத்து கொண்டனர். நாம் இந்தியர்கள், இந்துக்கள் என்பது நமது கலாச்சார அடையாளம். இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.