காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு- செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த மூத்த நிர்வாகிகள்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. மொத்தம் 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 30 பேர் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியில் பங்கு என தொடர்ந்து குரல் எழுப்பிய எம்.பி. மாணிக்கம் தாகூரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு நிலவிவரும் சூழலில், பா.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விசய் வசந்த் ஆகியோரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
முன்னதாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்ததமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும் என்றார். கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஆலோசனை செய்து வருகிறது, கட்சி நிர்வாகிகளிடம் தனியாக பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கிரிஷ் சோடங்கர் கூறினார்.