×

நாடாளுமன்றத்துக்கு வர விரும்பாத சிலர் உள்ளனர்..  எதிர்க்கட்சியினரை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர் 
 

 

நாடாளுமன்றத்துக்கு வர விரும்பாத சிலர் உள்ளனர் என்று எதிர்க்கட்சியினரை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கினார்.

ராகுல் காந்தி நேற்று காலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகள் குிறத்து விவாதிக்க எங்களுக்கு அனுமதி இல்லை. மசோதாவுக்கு பின் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் நிறைவேற்றப்படுகின்றன. இது நாடாளுமன்றத்தையும் ஜனநாயகத்தையும் நடத்துவதற்கான வழி அல்ல. பிரதமர் மோடி அவைக்கு வருவதில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையும் எழுப்ப எங்களுக்கு அனுமதி இல்லை. இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை. சீனாவின் லக்கிம்பூர் கெரி, விவசாயிகள் பிரச்சினை பற்றி எந்த விவாதமும் இல்லை. இதன் அர்த்தம் என்ன? இது (நாடாளுமன்றம்) இப்போது ஒரு கட்டிடம், ஒரு அருங்காட்சியகம் என்று தெரிவித்தது இருந்தார். அதற்கு அனுராக் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி நேரம் மற்றும் பிற மசோதாக்கள் மீது விவாதம் நடக்கும்போது, சிலர் அதில் கலந்து கொள்ளாமல் நாட்டை தவறாக வழி நடத்துகின்றனர். துரதிஷ்டவசமாக, காங்கிரஸ் தலைவரின் குடும்பத்தின்   நான்கு தலைமுறையை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தை அவர் (ராகுல் காந்தி) அவமதிக்கிறார். அவர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே குறைந்த நேரத்தையும், அதற்கு வெளியே அதிக நேரத்தையும் செலவிடுகிறார்கள்.

நாடாளுமன்றத்துக்கு வர விரும்பாத சிலர் உள்ளனர். நாடளுமன்றம் செயல்படும் போது கூட விவாதத்தில் பங்கேற்காமல், அவையை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மோடி அரசின்கீழ்  கடந்த 7 ஆண்டுகளில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் அவைகளில் விவாதித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.