×

அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்!!

தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய புகாரில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நிபந்தனையற்ற முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி கோவில்பட்டி தொகுதி ஊத்துப்பட்டி விலக்கு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது அந்த வழியாக சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜு வாகனத்தை நிறுத்தி அவர்கள் சோதனை செய்ய முயன்றனர். அப்போது தேர்தல் பறக்கும் படை குழுவினரை அமைச்சர் கடம்பூர் ராஜூ மிரட்டியுள்ளார். இதுகுறித்து பறக்கும் படை
 

தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய புகாரில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நிபந்தனையற்ற முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 12ஆம் தேதி கோவில்பட்டி தொகுதி ஊத்துப்பட்டி விலக்கு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது அந்த வழியாக சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜு வாகனத்தை நிறுத்தி அவர்கள் சோதனை செய்ய முயன்றனர். அப்போது தேர்தல் பறக்கும் படை குழுவினரை அமைச்சர் கடம்பூர் ராஜூ மிரட்டியுள்ளார். இதுகுறித்து பறக்கும் படை அதிகாரியை மிரட்டியதாக அமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அமைச்சர் தரப்பில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியை மிரட்டிய வழக்கில் கோவில்பட்டி அதிமுக வேட்பாளரான அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது .ஊத்துப்பட்டி விலக்கு அருகே அமைச்சர் கடம்பூர் ராஜு ஆதரவாளர்களின் வாகனங்களை சோதனையிட முயற்சி நடந்தது. அப்போது அதிகாரிகளை மிரட்டியதாக பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து, மற்ற அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டது .புகாரின் அடிப்படையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்ஜாமீன் கேட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில் அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால் அவருக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அதேசமயம் குற்றவியல் பிரிவு 506 கீழ் பதியப்படும்; அனைத்து வழக்குகளிலும் இதே நிலைப்பாடு பின்பற்றப்படுமா என நீதிபதிகள் அரசு தரப்பில் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது