×

சரத் பவாரின் பேச்சு கடவுள் ராமருக்கு எதிரானது, பிரதமர் மோடிக்கு எதிரானது அல்ல… உமா பாரதி தகவல்

இந்துக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் கூடி, கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்ட ஆகஸ்ட் 3 மற்றும் 5ம் தேதிகளை தேர்வு செய்தது. இந்த சூழ்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்றுமுன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கோயில் கட்டினால் கொரோனா வைரஸை ஒழித்து விடலாம் என சில மக்கள் நினைக்கிறார்கள்
 

இந்துக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் கூடி, கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்ட ஆகஸ்ட் 3 மற்றும் 5ம் தேதிகளை தேர்வு செய்தது. இந்த சூழ்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்றுமுன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கோயில் கட்டினால் கொரோனா வைரஸை ஒழித்து விடலாம் என சில மக்கள் நினைக்கிறார்கள் என கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும், பிரதமர் மோடியைத்தான் சரத் பவார் மறைமுகமாக சொல்லியுள்ளார் எனவும் மற்றொரு சர்ச்சை வெடித்தது. மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான உமா பாரதியிடம் செய்தியாளர்கள் சரத் பவார் கோயில் தொடர்பாக பேசியது குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு உமா பாரதி பதிலளிக்கையில் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி ஒரு போதும் விடுமுறை எடுத்தது இல்லை. அவர் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே உறங்குகிறார். அந்த அறிக்கை (சரத் பவார் பேச்சு) கடவுள் ராமருக்கு எதிரானது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானது அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார். ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.