×

“அண்ணன் விவேக்கின் மரணம் பேரதிர்ச்சி” உதயநிதி ஸ்டாலின் கண்ணீர்!

நடிகர் விவேக் மறைவுக்கு நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர்சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, நடிகர் விவேக் உடலுக்கு நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, நடிகர் கவுண்டமணி, மயில்சாமி, எம்எஸ் பாஸ்கர்,
 

நடிகர் விவேக் மறைவுக்கு நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர்சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, நடிகர் விவேக் உடலுக்கு நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, நடிகர் கவுண்டமணி, மயில்சாமி, எம்எஸ் பாஸ்கர், மனோ பாலா உள்ளிட்ட திரை பிரபலங்களும், வைகோ, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் ட்விட்டரில் இரங்கல் கூறியுள்ளனர்.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணன் விவேக் அவர்களின் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. கலைஞரின் அன்பை பெற்றவர். தலைவர் அவர்களின் நண்பர். ‘மனிதன்’ படத்தில் என்னுடன் நடித்தார்-வழிநடத்தினார். திரையிலும் நிஜத்திலும் சமூகம்-சூழலியலுக்காக தொடர்ந்து குரல்கொடுத்தவர்.

அண்ணனின் மரணம் தமிழகத்துக்கு பேரிழப்பு. தன் வாழ்நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களையும், உற்சாகத்தையும் விதைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணனின் இழப்பை குடும்பத்தார் எப்படி தாங்கிக்கொள்வர்? ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பம்-நண்பர்கள்- ரசிகர்களுக்கு என் ஆறுதல். சின்னக்கலைவாணர் விட்டு சென்ற சமூக பணிகளை நாம் தொடருவோம்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.