×

இந்த அட்ரெஸ்…தைரியம் இருந்தா என் வீட்டுக்கு வா – உதயநிதி ’ரெய்டு’ சவால்

தேர்தல் பிரச்சாரம் ஒருபக்கம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நெருங்கி வருவதால் பணம் பட்டுவாடா உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் கடந்த சில வாரங்களாக வருமானவரித் துறையினர் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர் . திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,“ திரு மோடி அவர்களே, திரு அமித்ஷா அவர்களே உங்களை பார்த்து பயப்படவோ, கும்பிடவோ, காலில்விழுந்து வணங்கவோ நான் ஒன்றும் எடப்பாடி பழனிசாமியோ, ஓ பன்னீர் செல்வமோ
 

தேர்தல் பிரச்சாரம் ஒருபக்கம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நெருங்கி வருவதால் பணம் பட்டுவாடா உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் கடந்த சில வாரங்களாக வருமானவரித் துறையினர் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர் .

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,“ திரு மோடி அவர்களே, திரு அமித்ஷா அவர்களே உங்களை பார்த்து பயப்படவோ, கும்பிடவோ, காலில்விழுந்து வணங்கவோ நான் ஒன்றும் எடப்பாடி பழனிசாமியோ, ஓ பன்னீர் செல்வமோ கிடையாது. நான் உதயநிதி ஸ்டாலின். நான் கலைஞர் பேரன், உங்கள் உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் பயப்படமாட்டேன். என்ன வேண்டுமானாலும் பன்னுங்க.. தொலைக்காட்சியில் காலையில் பார்த்தேன். என்னோட தங்கை செந்தாமரை வீட்டுக்கு ஐடி ரெய்டு அனுப்பிருக்காங்க… நான் என் வீட்டு அட்ரெஸ் கொடுக்கிறேன். தைரியம் இருந்தா என் வீட்டுக்குவா… என் வீட்டில் என்ன இருக்கிறது என காட்டுகிறேன். பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கிளை செயலாளர்கள் கூட பயப்படமாட்டார்கள்” எனக் கூறினேன்.