×

தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம்… எடப்பாடி அரசை விளாசி தள்ளிய உதயநிதி

மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 54,28,950 தடுப்பூசிகள் வந்த நிலையில் 12.10% தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “போலியோ-மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை பொதுமக்களிடம் சேர்த்ததில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை
 

மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 54,28,950 தடுப்பூசிகள் வந்த நிலையில் 12.10% தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “போலியோ-மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை பொதுமக்களிடம் சேர்த்ததில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடத்தில் உள்ளது. ஏப்ரல் வரை நமக்கு அனுப்பப்பட்ட 54.28 லட்சம் தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளது. தகவலறியும் உரிமைசட்டம் மூலம் மத்திய அரசு தந்த இத்தகவல், அடிமை அரசின் நிர்வாக குளறுபடியை காட்டுகிறது.

கொரோனா தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை மக்களிடம் சேர்க்கும் பணியை ஒருங்கிணைக்காமல், இறுதிகட்ட கொள்ளை-போலி விளம்பரங்களில் கவனம் செலுத்தியதே இதற்கு காரணம். இப்படி மக்கள் மீது அக்கறையற்ற அடிமை அரசால், கொரோனா 2-ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது. கொரோனா உயிரிழப்புகளுக்கும் சேதாரங்களுக்கும், கொள்ளையில் மட்டுமே கவனம் செலுத்திய அடிமைகளும்-அவர்களை ஆட்டுவிக்கும் ஆதிக்கவாதிகளுமே பொறுப்பு” என்றார்.