×

ஐ.டி.ரெய்டால் இலவச பப்ளிசிட்டி… உதயநிதியின் டேக் இட் ஈஸி பாலிசி!

தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் அனல் பறக்க பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த அதே வேளையில், பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, திமுகவின் முக்கிய பிரமுகர்களை குறிவைத்து ஐ.டி.ரெய்டு நடத்தப்பட்டது. அண்மையில் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதைத்
 

தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் அனல் பறக்க பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த அதே வேளையில், பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக, திமுகவின் முக்கிய பிரமுகர்களை குறிவைத்து ஐ.டி.ரெய்டு நடத்தப்பட்டது. அண்மையில் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டிலும் மருமகன் சபரீசன் வீட்டிலும் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்து திமுகவின் முக்கிய புள்ளிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு திமுக தலைவர்களும் கூட்டணி கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஐ.டி.ரெய்டால் எங்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை, பப்ளிசிட்டி தான் கிடைத்துள்ளது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வருமான வரித்துறை சோதனை திமுகவுக்கு இலவச விளம்பரத்தை தேடி தந்துள்ளது. மோடி, அமித்ஷா உள்ளிட்ட அனைத்து பாஜக தலைவர்களும் என்னை குறிவைத்து பேசுவதால் நானும் அவர்களை பற்றி பேசுகிறேன். என்னுடைய சொத்து மதிப்பு மட்டும் உயரவில்லை. அமித்ஷா மகனின் சொத்து மதிப்பும் ரூ.120 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.