×

“விவசாயிகள் குறித்து அதிமுகவிற்கு கவலை இல்லை” – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணி கட்சியினரே ராஜினாமா செய்த நிலையில், அதிமுக அரசு விவசாயத்தை பற்றி கவலைப்படாமல் ஆதரவு தெரிவிப்பதாக, திமுக இஞைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் தென்னமநாட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார கூட்டம் நடைபெற்றது, இதில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று, மண்டபத்தில் கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்த
 

தஞ்சாவூர்

வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணி கட்சியினரே ராஜினாமா செய்த நிலையில், அதிமுக அரசு விவசாயத்தை பற்றி கவலைப்படாமல் ஆதரவு தெரிவிப்பதாக, திமுக இஞைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் தென்னமநாட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார கூட்டம் நடைபெற்றது, இதில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று, மண்டபத்தில் கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், தான் வெறுமனே பிரச்சாரம் மட்டுமே செய்திருப்பேன் என்றும், ஆனால் தன்னை கைதுசெய்து அரசு இலவச விளம்பரம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்

மேலும், வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணிக்கட்சியினரே ராஜினாமா செய்யும் நிலையில், அதிமுக அரசு விவசாயத்தை பற்றி கவலைப்படாமல் ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறினார். மேலும், சேலம் 8 வழிச்சாலைக்கு இடையில் இருந்த தென்னை மரத்திற்கு 15 ஆயிரம் வரை கொடுத்த அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு குறைந்தபட்ச நிதி கூட கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.