×

விஜயகாந்தை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்… : வைரல் போட்டோஸ்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 156, அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வராக பதவியேற்கிறார். முதல் முறையாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சுமார் 63 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில்
 

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 156, அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வராக பதவியேற்கிறார். முதல் முறையாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சுமார் 63 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அமமுக – தேமுதிக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.குறிப்பாக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அங்கு டெபாசிட்டை இழந்துள்ளார்.

இந்நிலையில் திமுக சார்பாக சேப்பாக்கம் – திருவல்லக்கேணி வெற்றி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அத்துடன் விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்த அவருக்கு தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் சால்வை அணிவித்து வரவேற்றார்.அத்துடன் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கும், உதயநிதி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஆகியோர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.