×

அனல் பறக்கும் தேர்தல் களம் : திருக்குவளையில் உதயநிதி நாளை பிரச்சாரம்!

100 நாள் பரப்புரையை திருக்குவளையில் நாளை தொடங்குகிறார் உதயநிதி. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த 5 ஆண்டுகளாக காத்திருக்கும் திமுக தனது தேர்தல் களப்பணிகளை தொடங்கியுள்ளது. அதேபோல் அதிமுகவும் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முனைப்பு காட்டி வருகிறது. திமுகவின் முதல்வர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் முதல் முறையாக களமிறங்கும் நிலையில் இந்த தேர்தலுக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதிமுக அரசின் குறைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி
 

100 நாள் பரப்புரையை திருக்குவளையில் நாளை தொடங்குகிறார் உதயநிதி.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த 5 ஆண்டுகளாக காத்திருக்கும் திமுக தனது தேர்தல் களப்பணிகளை தொடங்கியுள்ளது. அதேபோல் அதிமுகவும் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முனைப்பு காட்டி வருகிறது.

திமுகவின் முதல்வர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் முதல் முறையாக களமிறங்கும் நிலையில் இந்த தேர்தலுக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதிமுக அரசின் குறைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் மு.க. ஸ்டாலின் இந்த முறை ஆட்சியை எப்பாடுபட்டாவது பிடித்து விடுவார் என திமுகவினர் நம்பி வருகின்றனர். அதற்கான பணிகளை ஐபேக் நிறுவனம் பக்கபலமாக செய்து வருகிறது.

இந்நிலையில் திமுகவுக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் 100 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அவர் முடிவெடுத்துள்ளார். திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் நாளை பிரச்சாரம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூரில் பரப்புரை மேற்கொள்கிறார் .வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து முதல் கட்டமாக உதயநிதி ஸ்டாலினை களமிறக்கியுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு கைகொடுத்த உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கைகொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.