15-20 எம். எல். ஏக்களை குறிவைக்கும் எதிர்க்கட்சிகள்?- கொதித்தெழுந்த விஜய்
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தான் இப்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
கூட்டத்தில் முதல்வர் மிகவும் கறாராகவும், அதே சமயம் அறிவுரையாகவும் பேசியுள்ளார். குறிப்பாக, தேர்தலுக்கு சற்று முன்பு கட்சியில் இணைந்து, பின்னர் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை எதிர்தரப்பினர் தொடர்பு கொண்டு பேசி வருவதாக நமது உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. எதிர்தரப்பினர் சுமார் 15 முதல் 20 MLA-க்களுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது குறித்து உடனே தலைமைக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று முதல்வர் கூறியுள்ளார். தவறான பாதையில் செல்ல வேண்டாம். தவறான பாதையை தேர்ந்தெடுத்தால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று நேரடியாகவே எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே ஒரு சில MLA-க்கள் மீது பொதுமக்களிடம் இருந்தும், கட்சிக்குள் இருந்தும் புகார்கள் இருந்து வருகின்றன. அவர்களின் செயல்பாடுகளால் அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. எந்தவித பிரச்சனையும் இல்லாத நேரத்தில், இந்த மாதிரி ஒரு சில MLA-க்களின் நடவடிக்கையால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை எதிர்க்கட்சிகள் பெரிதாக வெளியே கொண்டு வருகின்றன என்றும் முதல்வர் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக வெற்றி கழக ஆட்சியை தடுக்கும் நோக்கில் சதி செய்பவர்கள் விரிக்கும் வலையில் சிக்க வேண்டாம். மக்களுக்கு தேவையான பணிகளை செய்யுங்கள். நமது திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். மக்கள் தான் நமது எஜமானர்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.