×

அதிரடி ட்விஸ்ட்: அமைச்சருடன் மோதும் டிடிவி தினகரன்… அந்த தொகுதிய ஏன் சூஸ் பண்ணாரு?

அரசியலிலிருந்து சசிகலா பின்வாங்கி இருந்தாலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் போட்டியிடப் போவதாக அறிவித்து அதற்கான வேலைகளிலும் அவர் இறங்கினார். சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டது. அதன்பின் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீடும் நடைபெற்றுவருகிறது. இச்சூழலில் நேற்று 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டார். ஆனால் அதில் அவர் பெயர் இல்லை. தற்போது இரண்டாம் கட்டமாக 50 பேர்
 

அரசியலிலிருந்து சசிகலா பின்வாங்கி இருந்தாலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் போட்டியிடப் போவதாக அறிவித்து அதற்கான வேலைகளிலும் அவர் இறங்கினார். சில நாட்களுக்கு முன் கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டது. அதன்பின் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீடும் நடைபெற்றுவருகிறது.

இச்சூழலில் நேற்று 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டார். ஆனால் அதில் அவர் பெயர் இல்லை. தற்போது இரண்டாம் கட்டமாக 50 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டிருக்கிறார். அப்பட்டியலில் முதலாவதாக அவர் பெயர் இருக்கிறது. அதன்படி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய தேனி தொகுதிகளைத் தேர்ந்தெடுப்பார் என்று நினைத்திருந்த நிலையில், எதிர்பாராத ட்விஸ்ட்டாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் களம் காண்கிறார்.

நேற்று வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் கோவில்பட்டி தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் கடம்பூர் ராஜுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவை எதிர்த்துக் களம் காண்கிறார். தனக்குப் பெருவாரியான ஆதரவு இருக்கும் தேனி, தஞ்சாவூர் பகுதியில் போட்டியிடாமல் கோவில்பட்டியை டிடிவி தேர்ந்தெடுத்தது புரியாத புதிராக இருக்கிறது.