×

ஓபிஎஸ் நிச்சயம் மன கஷ்டத்துடனே இப்போதும் இருக்கிறார்- டிடிவி தினகரன்

சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் அவரை நிச்சயம் வரவேற்பேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்ததையடுத்து சென்னை, தியாகராய நகர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை தினகரன் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போதைய அரசியல் நிலவரம், அமைச்சர்களின் நிலை குறித்து இருவரும் அலோசித்ததாக கூறப்படுகிறது. சசிகலாவுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “துணை
 

சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் அவரை நிச்சயம் வரவேற்பேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்ததையடுத்து சென்னை, தியாகராய நகர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை தினகரன் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போதைய அரசியல் நிலவரம், அமைச்சர்களின் நிலை குறித்து இருவரும் அலோசித்ததாக கூறப்படுகிறது.

சசிகலாவுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “துணை முதல்வர் ஓபிஎஸ் நிச்சயம் மனது கஷ்டத்துடனே இப்போது இருக்கிறார். அவர் ராமர் அருகில் பரதனாக இருக்க வேண்டியவர். இராவணன் அருகில் இப்போது இருக்கிறார். சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் அவரை நிச்சயம் வரவேற்பேன் .மருத்துவர் அறிவுரைப்படி சசிகலா ஓய்வெடுத்துவருகிறார். பிப்ரவரி 24 ஆம் தேதி அவர் வெளியில் வருவார். சுதாகரனுக்கு அபராதத் தொகை செலுத்த எங்களால் முடியவில்லை. அதனால் தண்டனைக் காலம் முடிந்தாலும் அவரால் வெளியே வரமுடியவில்லை. தொகை தயாரானதும் அவர் வெளியே வருவார். கூட்டணி குறித்து நாங்கள் பாஜகவிடம் ஆலோசிக்கவில்லை. அதிமுக தொடர்பான வழக்கில் சட்டப்படி எங்களுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும். அதிமுக, திமுகவை நம்பாத மக்கள் எங்களுக்கு கிடைக்கும்” எனக் கூறினார்.