×

தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் அதிமுகவுடன் கூட்டணி- டிடிவி தினகரன்

 

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் பத்தாது,  போக போக அடிபட்டு திருந்தி நிதானமாகி விடுவார் என அ.ம.மு.க பொதுக் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.


தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், “ தமிழ்நாட்டில் தமிழ் தான் தாய்மொழி, எந்த மாநிலத்திலும் தாய்மொழிக்குதான் முக்கியம். தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தமிழ் மக்கள் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழ்நாட்டில் 1965 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இந்தி திணிப்பை கொண்டுவந்ததால்தான் இதுவரை ஆட்சி பிடிக்க முடியாமல் போனது. அது போன்ற விபரீத முயற்சியில் பா.ஜ.க ஈடுபடாது.

செய்தியாளர்கள் மடக்கி தான் கேள்வி கேட்பார்கள் அதற்கு பக்குவமாகதான் பதில் சொல்ல வேண்டும். அண்ணாமலை இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் அடிப்பட்டு திருந்துவார். அப்போது நிதானம் ஆகிவிடுவார். தேசிய கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலையின், இதுபோன்ற போக்கை கட்சி தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவர் பொறுமையாக பதில் சொல்ல வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததுபோல் 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது.திமுக ஒரு தீய சக்தி. இதனால் தான் இலவசங்களை தவிர்த்துவருகிறது. எடப்பாடி பழனிசாமி மீதான கோபத்தால் மக்கள் திமுகவுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளனர். தற்போது உள்ள சூழலை பார்த்தால் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வரலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் பிரச்சனை முடிவுக்கு வரும், ஆனால் நாங்கள் அவர்களுடன் சேரவேண்டிய அவசியல் இல்லை. அமமுக தனியாக இயங்கிவருகிறது. எதற்காக ஒன்றிணைய வேண்டும்? வேண்டுமானால் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம்.” என்றார்