×

செல்லூர் ராஜூ அறிவிப்பால் வங்கிகளுக்குச் சென்று ஏமாறும் பொது மக்கள்! – டி.டி.வி.தினகரன் வேதனை

கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கார்டை காட்டி ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதாக டி.டி.வி.தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட் அறிக்கையில், “குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000/- கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன. குடும்ப அட்டை
 

கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கார்டை காட்டி ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதாக டி.டி.வி.தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட் அறிக்கையில், “குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000/- கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன.

அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன. கொரோனா துயரால் ஏற்கனவே அல்லல்படும் மக்களை இப்படி அலைக்கழிப்பது வேதனைக்குரியது.