×

சசிகலாவை யாராலும் தடுக்க முடியாது; இந்த தேர்தலில் போட்டியிடுவார்- டிடிவி தினகரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்ததையடுத்து பெங்களூரு விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் 7 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருகிறார் எனக்கூறிய டிடிவி தினகரன் திடீரென அவர் 8 ஆம் தேதி வருவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் தயாராகிவிட்டனர். போஸ்டர், பேனர் என அதகளப்பட்டுவருகிறது. இந்நிலையில் தென்காசி திருமலைக்கோவிலில்
 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்ததையடுத்து பெங்களூரு விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் 7 ஆம் தேதி சசிகலா தமிழகம் வருகிறார் எனக்கூறிய டிடிவி தினகரன் திடீரென அவர் 8 ஆம் தேதி வருவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் தயாராகிவிட்டனர். போஸ்டர், பேனர் என அதகளப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தென்காசி திருமலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவார். சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. டிஜிபியிடம் இல்லை, முப்படை தளபதிகளிடமும் அதிமுகவினர் புகார் அளித்தாலும் சசிகலாவை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. தீயசக்தி திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டோம்.

சசிகலாவின் வருகையை அமமுக, உண்மையான அதிமுக, ஜெயலலிதாவின் விசுவாசிகள் மற்றும் தமிழக மக்கள் உள்ளிட்டோர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழக அரசு கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ததை வரவேற்கிறேன். ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவோம். அதிமுகவை ஜனநாயக வழியில் மீட்டெடுப்பதற்கான ஆயுதம்தான் அமமுக. அதில் வெற்றி காண்போம்.” எனக் கூறினார்.