×

தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ரகசிய பேச்சுவார்த்தை

 

அதிமுகவில் பல்வேறு அணிகள் உருவாகி, முக்கிய தலைவர்கள் பிரிந்து சென்றுள்ள நிலையில், கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

அதிமுகவில் பல்வேறு அணிகள் உருவாகி, முக்கிய தலைவர்கள் பிரிந்து சென்றுள்ள நிலையில், கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. தென் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர், டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை வைத்தனர். இந்த சூழ்நிலையில், இரு தரப்பு நிர்வாகிகளிடையே மறைமுக மற்றும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. எடப்பாடி இது தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக வேலுமணி, சண்முகம் தரப்பைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் சென்னையில் சசிகலாவை சந்தித்து பேசியதாகவும், இதுபோன்ற சந்திப்புகள் பலமுறை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட சில தலைவர்களும் சசிகலாவுடன் பேசியதாக கூறப்படுகிறது.