×

“அமமுக – தேமுதிக கூட்டணிக்கு சசிகலா ஆதரவு” :

திமுகவையும், அதிமுகவை வீழ்த்துவதே ஒரே குறிக்கோள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தேமுதிக – அமமுக கூட்டணி உறுதியான நிலையில் முதல் முறையாக விஜயகாந்தை சந்தித்தார் டிடிவி தினகரன். அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கேட்ட சீட்டுகள் தராததால் அக்கட்சி கூட்டணியிலிருந்து அதிருப்தியுடன் விலகியது. அத்துடன் அரசியலில் ஜெயலலிதா போன்ற பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என
 

திமுகவையும், அதிமுகவை வீழ்த்துவதே ஒரே குறிக்கோள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக – அமமுக கூட்டணி உறுதியான நிலையில் முதல் முறையாக விஜயகாந்தை சந்தித்தார் டிடிவி தினகரன். அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கேட்ட சீட்டுகள் தராததால் அக்கட்சி கூட்டணியிலிருந்து அதிருப்தியுடன் விலகியது. அத்துடன் அரசியலில் ஜெயலலிதா போன்ற பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாக கூறினார்.

இந்நிலையில் திமுகவையும், எடப்பாடி அணியையும் வீழ்த்துவதே எங்களின் ஒரே குறிக்கோள் என்று தினகரன் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த அவர் பின்னர் செய்தியாளர்களை அவர், தமிழக மக்களின் நலனுக்காக தேமுதிக – அமமுக கூட்டணி அமைத்துள்ளோம்.

ஆட்சியில் இருக்கும்போது எதுவும் செய்யாமல் இப்போது இதை செய்வோம் அதை செய்வோம் என ஏமாற்றுகிறார்கள் துரோக கூட்டணியினர். கடனில் தள்ளாடும் தமிழகத்தை வெற்றி நடை போடுகிறது என்றால் மக்கள் காதில் பூ சுற்றுகிறார்களா? அதிமுக – தேமுதிக கூட்டணிக்கு சசிகலாவின் ஆதரவு உண்டு. காவிரி டெல்டா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அமமுகவிற்கு தொண்டர்கள் உள்ளனர்.ஆர்.கே. நகருக்கு பதில் கோவில்பட்டியில் போட்டியிட பயம் காரணமில்லை. ஏற்கனவே கட்டாயத்தின் பேரில் தான் ஆர்.கே. நகரில் போட்டியிட்டேன்” என்றார்.