×

பிரேமலதா பிடிவாதம்.. கடுப்பான டிடிவி தினகரன்!

கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் திமுகவையே தெறிக்கவிட்ட கட்சி தேமுதிக. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்துக்கு உடல் நலம் குன்றியதில் இருந்து அக்கட்சியின் மவுசு குறைந்துவிட்டது. அதிமுக கூட்டணியில் 20 சீட்டுகள் கூட கொடுக்காத அளவிற்கு தேமுதிக வந்துவிட்டது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் அதிமுகவில் இருந்து வெளியேறிய தேமுதிகவுக்கு, டிடிவி தினகரன் கதவைத் திறந்தார். அமமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்த்துக் கொண்ட தினகரன், 60 தொகுதிகளையும் கொடுத்தார். அதில் விருத்தாச்சலமும் ஒன்று. அந்த தொகுதியில் தான் பிரேமலதா
 

கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் திமுகவையே தெறிக்கவிட்ட கட்சி தேமுதிக. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்துக்கு உடல் நலம் குன்றியதில் இருந்து அக்கட்சியின் மவுசு குறைந்துவிட்டது. அதிமுக கூட்டணியில் 20 சீட்டுகள் கூட கொடுக்காத அளவிற்கு தேமுதிக வந்துவிட்டது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் அதிமுகவில் இருந்து வெளியேறிய தேமுதிகவுக்கு, டிடிவி தினகரன் கதவைத் திறந்தார்.

அமமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்த்துக் கொண்ட தினகரன், 60 தொகுதிகளையும் கொடுத்தார். அதில் விருத்தாச்சலமும் ஒன்று. அந்த தொகுதியில் தான் பிரேமலதா போட்டியிடுகிறார். விஜயகாந்த், விஜயபிரபாகரன் உள்ளிட்ட யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை. விஜயகாந்த் சென்டிமென்ட்டை பின்பற்றி அந்த தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக கூட்டணியில் இருந்த போதே பிரேமலதா தன்னிச்சையாகத் தான் செயல்படுவார். அதே போல தான் அவர் தற்போது அமமுக கூட்டணியிலும் இருக்கிறாராம். விருத்தாச்சலம் தொகுதி கட்சி நிர்வாகிகள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், தேமுதிக ஒன்றிய செயலாளர்கள் எல்லாரும் விருத்தாசலம் வரவேண்டும் என கூறினாராம். அமமுகவினரும் தேமுதிக பிரச்சாரங்களுக்கு செல்வதில்லையாம். இது டிடிவி தினகரனின் கவனத்துக்கு சென்றுள்ளது. இதனால், பிரேமலதா மீது அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.

கூட்டணியுடன் மட்டுமில்லை. அரசு நிர்வாகிகளுடனும் பிரேமலதா இப்படித் தான் நடந்துக் கொள்கிறார். அண்மையில் அவர், கடலூரில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளாமல் அடம் பிடித்ததே அதற்கு சான்று. இப்படி எல்லா பக்கமும் பிடிவாதம் காட்டும் பிரேமலதாவின் குணம், தேமுதிகவினரையே அதிருப்தி அடையச் செய்துள்ளது.