×

திமுகவில் வெடித்த சிக்கல்- ஆதரவாளர்களுக்கு பதவி கேட்கும் கனிமொழி, உதயநிதி

 

ஆதரவாளர்களுக்கு பதவி கேட்டு கனிமொழி மற்றும் உதயநிதி தரப்பு நெருக்கடி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஆகஸ்ட் 22-ந் தேதி திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானத்தின்படி, மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தொடர்ந்து, 70 வயதைக் கடந்த எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆர்.காந்தி, சுந்தர், எஸ்.ஆர்.சிவலிங்கம், முத்துசாமி, சாக்கோட்டை அன்பழகன், ரகுபதி, தளபதி, ராமகிருஷ்ணன், ஆவுடையப்பன் ஆகியோர் அந்த பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் மாவட்ட செயலாளர்களில் 30% தனது ஆதரவாளர்களுக்கு வேண்டும் என கனிமொழி கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் இளைஞரணிக்காக திமுக தலைமைக்கு உதயநிதி நெருக்கடி அளிப்பதாகவும் கூறப்படுகிறது. 70 வயதை கடந்த 13 பேரின் மாவட்ட செயலாளர் பொறுப்பு காலியாக உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சிலரும் திமுக தலைமைக்கு நெருக்கடி அளித்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் தங்கள் மாவட்டங்களில் ஆதரவாளர்களுக்கு பொறுப்பு கேட்டு முன்னாள் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.