×

எடப்பாடி பழனிசாமியிடம் விஜயகாந்த் வைத்த ஓர் கோரிக்கை!

கொரோனாவே இல்லாத இந்தியாவை உருவாக்க உதவ வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார் . தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அத்துடன் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ வசதிக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.குறிப்பாக டெல்லி , மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குறைவான நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் இரண்டு
 

கொரோனாவே இல்லாத இந்தியாவை உருவாக்க உதவ வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார் .

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அத்துடன் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ வசதிக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.குறிப்பாக டெல்லி , மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குறைவான நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகள் உயிர் இழக்கும் அபாயத்தில் உள்ளதாக டெல்லி மருத்துவமனை அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் முன்னதாகவே அனுப்பி வைக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி பற்றாக்குறையை போக்க, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை நீக்குவது அரசின் கடமை. பொதுமக்களும் மத்திய மாநில அரசுகளுடன் ஒத்துழைத்து, கொரோனாவே இல்லாத இந்தியாவை உருவாக்க உதவ வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.