×

இலவச மின்சாரம் ரத்தைக் கண்டித்து மே 26ல் ஆர்ப்பாட்டம்! – தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

விவசாயிகள், குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து வருகிற 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “விவசாயிகள், குடிசைவாசிகள், கைத்தறி நெசவாளர்கள், ஏழை எளிய மக்கள் பயன்பெற்றுவருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை நோக்கமாக கொண்டதே மத்திய மின்சார சட்டத் திருத்தம். விவசாயிகள், குடிசைவாசிகள், கைத்தறி
 

விவசாயிகள், குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து வருகிற 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “விவசாயிகள், குடிசைவாசிகள், கைத்தறி நெசவாளர்கள், ஏழை எளிய மக்கள் பயன்பெற்றுவருகிற இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை நோக்கமாக கொண்டதே மத்திய மின்சார சட்டத் திருத்தம்.

மத்திய, மாநில அரசுகளின் இலவச மின்சார பறிப்பு நடவடிக்கையை எதிர்த்து வட்டார, நகர, பேரூர்களில் சமூக ஊரடங்கை கடைப்பிடித்து மே 26ம் தேதி காலை 10 மணிக்கு அரசு அலுவலகங்கள் முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று கூறியுள்ளார்.