×

“இந்து கடவுள்களை அவமதிப்போருக்கு பாடம் புகட்டவே யாத்திரை” – எல்.முருகன்

ஈரோடு இந்து கடவுள்களை அவமதிப்பவர்களுக்கு பாடம் புகட்டவே, வேல் யாத்திரையை தொடங்கி உள்ளதாக, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். வேல் யாத்திரையின் ஒரு பகுதியாக இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை கோயிலில், முருகன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கந்தசஷ்டி கவசம் பாடிய இடத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஈரோட்டில் யாத்திரையை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும், இந்து கடவுள்களை அவமதிக்கும் திமுக, கருப்பர் கூட்டம் உள்ளிட்டோருக்கு தக்க பாடத்தை புகட்டுவதே தங்களது
 

ஈரோடு

இந்து கடவுள்களை அவமதிப்பவர்களுக்கு பாடம் புகட்டவே, வேல் யாத்திரையை தொடங்கி உள்ளதாக, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். வேல் யாத்திரையின் ஒரு பகுதியாக இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை கோயிலில், முருகன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கந்தசஷ்டி கவசம் பாடிய இடத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஈரோட்டில் யாத்திரையை தொடங்குவதாக தெரிவித்தார்.

மேலும், இந்து கடவுள்களை அவமதிக்கும் திமுக, கருப்பர் கூட்டம் உள்ளிட்டோருக்கு தக்க பாடத்தை புகட்டுவதே தங்களது நோக்கம் என தெரிவித்த முருகன், இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்போம் எனவும் தெரிவித்தார். அத்துடன், அமித் ஷா வருகை, பாஜக தொண்டர்களுக்கு ஊக்கத்தையும், தைரியத்தையும் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.