×

அமைச்சர்களை எதிர்கொள்ள பயமா? கூட்டணி கட்சிகளிடம் அதிமுக தள்ளிய ‘அந்த 14 தொகுதிகள்’

 

அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதில் 3 தொகுதிகள் தற்போதைய திமுக அமைச்சர்களின் தொகுதியாகும். 


தமிழக அமைச்சரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ளனர்.  அதில், 13 அமைச்சர் தொகுதிகள், ஒரு சபாநாயகர் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்கிறது அதிமுக. இதில், அதிகப்படியான அமைச்சர் தொகுதிகள் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


1) ஐஜேகே;

குன்னம் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

2) தமாகா; 

ஒட்டன்சத்திரம் - அமைச்சர் சக்கரபாணி

ஈரோடு(மேற்கு) - அமைச்சர் முத்துசாமி

ராணிப்பேட்டை - அமைச்சர் ஆர்.காந்தி

3) அமமுக;

சைதாப்பேட்டை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மன்னார்குடி - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

4) பாமக;

சேலம்(வடக்கு) - அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்

5) பாஜக;

திருப்பத்தூர் - அமைச்சர் பெரியகருப்பன்

திருச்செந்தூர் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

பத்மநாபபுரம் - அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆவடி - அமைச்சர் நாசர்

திருவண்ணாமலை - அமைச்சர் எவ வேலு

ராசிபுரம் - அமைச்சர் மதிவேந்தன்

ராதாபுரம் - சபாநாயகர் அப்பாவு