×

தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்ய முடியாது ; அண்ணாமலைக்கு திருமா பதிலடி!

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி அமைக்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை பாஜக கமலாலயத்தில் நேற்று பிரதமர் மோடியின் சாதனைகளை ஆவணப்படுத்தும் விதமாக சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியல்வாதிகள் கோபாலபுரத்தில் இருந்து கோ பேக் மோடி என்று கூறலாம். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல்வாதிகள் நிறைந்த இந்தியா செயலற்று கிடந்தது. இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் இந்தியன்
 

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி அமைக்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை பாஜக கமலாலயத்தில் நேற்று பிரதமர் மோடியின் சாதனைகளை ஆவணப்படுத்தும் விதமாக சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியல்வாதிகள் கோபாலபுரத்தில் இருந்து கோ பேக் மோடி என்று கூறலாம். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல்வாதிகள் நிறைந்த இந்தியா செயலற்று கிடந்தது. இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் இந்தியன் என்று சொல்லும் போது ஒரு மரியாதை, ஒரு கொண்டாட்டம் ஏற்படும் அளவுக்கு உதாரணமாக இருக்கிறது. பிரதமர் மோடி இருக்கும் போதே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் பாஜகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக அமரப் போவதை மோடி பார்க்கத்தான் போகிறார் என்று கூறியிருந்தார்.

அவரது பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக சேலத்தில் செய்தியாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஒன்றிய அரசை கண்டித்து வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என 20ம் தேதி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயக சக்திகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். விசிகவினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநராகப் பதவியேற்ற ரவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. தமிழகத்திற்கு அவரை நியமனம் செய்யக்கூடாது என கூறியும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் நடந்துள்ளது. அது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பதில் விசிகவுக்கு உடன்பாடு இல்லை. ஏற்கனவே மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி உள்ளது. திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது திமுக அரசு; சமூக நீதி அரசு என்று தெரிவித்தார்.