×

அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்ள முயற்சி- திருமாவளவன்

 

எதிர்க்கட்சியாக செயல்படுகின்றோம் என்பதை காட்டிக் கொள்ளவே பழனிசாமி ஆளுநரை சந்தித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளன்  பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற சுகாதார துறை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சி முடிந்தவுடன் தொல்‌.திருமாவளவன் வெளியே வரும் போது  சுகாதார  பணிகள் துணை இயக்குனர் கீதா ராணி கரகத்தை தலையில் வைத்து ஆடினார். ஆட்டத்தை பார்த்த தொல்‌.திருமாவளவன் அவருக்கு கை கொடுத்து வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல்‌.திருமாவளவன், “எதிர்க்கட்சியாக செயல்படுகின்றோம் என்பதை காட்டிக் கொள்ளவே பழனிசாமி ஆளுநரை சந்தித்துள்ளார். தற்போது  அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு பாஜக தாங்களே எதிர்க்கட்சி என காட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த சூழலில் அதிமுக தலைமைக்கு எதிரான விமர்சனங்கள் அதிமுகவில்லையே எழுந்தன. அதை சரி செய்வதற்கு, ஈடு செய்வதற்கு  எடப்பாடி பழனிச்சாமி இந்த சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறார் என நான் கருதுகிறேன். ஆனால் அரசின் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகளை கூற வேண்டும் என ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆதாரம் இருந்தால் அவர்கள் சட்டப்படி முன் வைக்கட்டும்” எனக் கூறினார்.