×

ஜெயலலிதாவுக்கு எதிராக நான் பேச வேண்டிய காலகட்டம் ஏற்பட்டது... ரஜினிகாந்த் உருக்கம்

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  ஜெயலலிதாவின் 75வது  பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

 அதில்,  மதிப்பிற்குரிய அமரர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களுடைய 75வது பிறந்தநாள் .  அவர் நம்மோடு இப்போது இல்லையே என்கிற வருத்தத்தோடு அவரை நினைவூட்டி கொள்கிறே.  ன் ஜெயலலிதா போன்று இன்னொரு பெண்மணியை பார்க்க முடியாது.   அவரது அழகு, கம்பீரம், ஆளுமை , அறிவு,  துணிச்சல் யாருக்கும் வராது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு புரட்சித்தலைவர் என பெயர் வந்தது அனைவருக்கும் தெரியும்.   தனி ஒரு நடிகனாக இருந்து ஒரு மாநிலத்தில் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானார்.   அது மிகப் பெரிய புரட்சி.  அவர் மறைவுக்கு பின்னர் அந்த கட்சி பிளவுபட்ட போது அந்த கட்சியில் திறமையான தலைவர்கள் இருந்தபோது தனி பெண்மணியாக பிளவு பட்ட கட்சியை ஒன்றாக்கி இன்னும் பலமாக்கி பெரிய கட்சியாக்கி தமிழ்நாட்டை ஆண்டவர் . அதனால் தான் அவர் புரட்சித்தலைவி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

 இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவை மதித்தார்கள்.   அவரின் திறமையை பார்த்து பிரமித்தார்கள் . ஒரு காலகட்டத்தில் அவருக்கும் எனக்கும் மனஸ்தாபம்.  அவருக்கு எதிராக நான் பேச வேண்டிய காலகட்டம் ஏற்பட்டது.   ஆனால் அவற்றையெல்லாம் மறந்து என்னுடைய பெண் கல்யாணத்திற்கு வந்து முன் நின்று நடத்திக் கொடுத்தார்.  அவ்வளவு பெரிய கருணை உள்ள கொண்டவர் .  அவருடைய நாமம் வாழ்க என்று குறிப்பிட்டு இருக்கிறார்.