×

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு!!

தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.234 தொகுதிகளிலும் 3,585 ஆண்கள், 411 பெண்கள், மூன்றாம் பாலினம் இரண்டு பேர் என மொத்தம் 3998 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், அரவக்குறிச்சியில் 31 பேரும் களம்காண்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடியில் ஈபிஎஸ்,
 

தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.234 தொகுதிகளிலும் 3,585 ஆண்கள், 411 பெண்கள், மூன்றாம் பாலினம் இரண்டு பேர் என மொத்தம் 3998 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், அரவக்குறிச்சியில் 31 பேரும் களம்காண்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடியில் ஈபிஎஸ், கொளத்தூரில் ஸ்டாலின், போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதுபோல் கோவில்பட்டியில் தினகரன், கோவை தெற்கில் கமல் , திருவொற்றியூரில் சீமான் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தமிழக தேர்தலை ஒட்டி மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. பாதுகாப்புடன் வாக்கு சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரை அனல் பறக்கும் விதமாக நடைபெற்றது. திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் 2021 சட்டமன்ற தேர்தலில் நேருக்கு நேர் மோதும் நிலையில், இந்த ரேஸில் அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.