×

அதிமுக அமைச்சரை விரட்டியடித்த முக்குலத்தோர் !!

தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பெற வசதியாக டின்என்டி (DNT) அதாவது சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படுவர் என கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் வன்னியர்களின் நீண்ட கால கோரிக்கையான வன்னியர் இடஒதுக்கீடு 10.5 % அளிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் சமீபத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கு பாமகவினர் வரவேற்பு அளித்தனர். இருப்பினும் சீர்மரபினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில்
 

தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பெற வசதியாக டின்என்டி (DNT) அதாவது சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படுவர் என கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் வன்னியர்களின் நீண்ட கால கோரிக்கையான வன்னியர் இடஒதுக்கீடு 10.5 % அளிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் சமீபத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கு பாமகவினர் வரவேற்பு அளித்தனர். இருப்பினும் சீர்மரபினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தொகுதியில் வேட்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ளார் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி. இவர் நேற்று மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது வல்லராமபுரத்தில் கட்சி தொண்டர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட சென்ற போது, முக்குலத்தோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் ராஜலட்சுமியை வாக்கு சேகரிக்க உள்ளே வர கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தினர். வன்னியர் இடஒதுக்கீடு அளித்து மற்ற சமூக அமைப்பினருக்கு வஞ்சகம் செய்துவிட்ட அதிமுக அரசுக்கு எங்கள் வாக்குகள் இல்லை என கூறி போராட்டம் செய்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அமைச்சரின் வாகனத்தை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

அதிமுக அரசு கூட்டணிக்காக சீர் மரபினர் இடஒதுக்கீட்டில் துரோகம் செய்துவிட்டதாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முக்குலத்தோர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுமார் 100ற்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.