×

“பா.ஜ.கவில். நானா..? நெருப்பைத் தொட முடியுமா?” விஜய தாரணி ஆவேசம்

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தொடர்பாளருமான குஷ்பூ பா.ஜ.கவில் இணந்ததை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணியும் பா.ஜ.க.வில் இணைவதாக செய்திகள் வெளி வந்தன. இந்த தகவல் தவறானது..”நான் நெருப்பு..என்னை பா.ஜ.க தொட முடியாது” என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: குஷ்பு பா.ஜ.க.விற்கு சென்றதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை, இதனால் எந்த அரசியல் மாற்றமும் நிகழப்போவதில்லை.அவர் பாஜக சென்றதும் எனது கண்டனத்தை நான் உடனடியாகத் தெரிவித்தேன்.ஆனால் நானே பாஜகவில் சேரப்
 

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தொடர்பாளருமான குஷ்பூ பா.ஜ.கவில் இணந்ததை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயதாரணியும் பா.ஜ.க.வில் இணைவதாக செய்திகள் வெளி வந்தன. இந்த தகவல் தவறானது..”நான் நெருப்பு..என்னை பா.ஜ.க தொட முடியாது” என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:


குஷ்பு பா.ஜ.க.விற்கு சென்றதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை, இதனால் எந்த அரசியல் மாற்றமும் நிகழப்போவதில்லை.அவர் பாஜக சென்றதும் எனது கண்டனத்தை நான் உடனடியாகத் தெரிவித்தேன்.ஆனால்

நானே பாஜகவில் சேரப் போவதாத தகவல்கள் பரவி உள்ளன. நான் மட்டுமல்ல, எனது குடும்பமே காங்கிரஸ் பாரம்பரியம் மிக்கது. எனக்கு பாஜகவுக்கு செல்ல வேண்டிய அவசியமுமில்லை. கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சிலர் வதந்தி பரப்புகிறார்கள்.நான் நெருப்பு என்னை பா.ஜ.க தொடமுடியாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.