×

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக களம் இறங்கும் வலயார் சிறுமிகளின் தாய்… காங்கிரஸ் ஆதரவு

கேரள முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் தர்மதம் தொகுதியில் அவருக்கு எதிராக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த வலயார் சிறுமிகளின் தாய் போட்டியிட உள்ளார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் வலயாரில் கடந்த 2017 ஜனவரி 13ம் தேதியன்று 11 வயது சிறுமியின் சடலம் அவரது 9 வயது சகோதரியால் வலயார் அருகே உள்ள அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே ஆண்டு மார்ச் 4ம் தேதியன்று இளைய சகோதரியும் இதே போன்ற சூழ்நிலையில் அவரது
 

கேரள முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் தர்மதம் தொகுதியில் அவருக்கு எதிராக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த வலயார் சிறுமிகளின் தாய் போட்டியிட உள்ளார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் வலயாரில் கடந்த 2017 ஜனவரி 13ம் தேதியன்று 11 வயது சிறுமியின் சடலம் அவரது 9 வயது சகோதரியால் வலயார் அருகே உள்ள அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே ஆண்டு மார்ச் 4ம் தேதியன்று இளைய சகோதரியும் இதே போன்ற சூழ்நிலையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தது. அடுத்தடுத்து சிறுமிகள் ஒரே மாதிரி சூழ்நிலையில் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கேரளா போலீசார் கைது செய்தனர். ஆனால் 2019ம் ஆண்டில் ஆதாரங்கள் இல்லாததை காட்டி பாலக்காடு நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் 2 தலித் மைனர் சகோதரிகளின் இயற்கைக்கு மாறான மரண வழக்குகளில் 3 பேரை விடுவித்த பாலக்காடு நீதிமன்ற உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தேர்தல்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக தர்மதம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் வலயார் சிறுமிகளின் தாய் கூறியதாவது: ஒரு சுயேட்சை வேட்பாளராக எனது போராட்டத்தை தொடருவேன். என் மகளுக்காக நான் இன்னும் நீதி கேட்பதால் இது நீதிக்கான அடையாள போராட்டம். எனது மகள்களுக்கு நீதி வேண்டும். திருவனந்தபுரத்தில் நான் முதல்வரை சந்தித்தேன். என் குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாகவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதை உறுதி செய்யுமாறு அழுதேன்.

காங்கிரஸ்

தேர்தலில் போட்டியிடுமாறு பலர் என்னிடம் கேட்கிறார்கள். அதனால் நான் சவாலை ஏற்க முடிவு செய்தேன். முதல்வருக்கு எதிராக சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன். தவறான 2 போலீஸ் அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். தேர்தலில் சங் பரிவார் அமைப்புகளிடம் ஆதரவு கேட்க மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கொள்கையளவில், நீதிக்கான போராட்டத்தில் தாயை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது என்று கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.