×

’’இவர்களுக்கு வழங்கப்படும் கடனே பிற்காலத்தில் அரசு தள்ளுபடி செய்கிறது’’

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விணப்பம் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை நகர், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன், பங்குத்தொகை 100 ரூபா மற்றும் நுழைவு கட்டணம் 10 ரூபாய் செலுத்தி உறுப்பினர் ஆகலாம். விவசாயிகளும், பொதுமக்களும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர்ந்து கடனுதவி பெறலாம்.
 

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விணப்பம் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை நகர், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், பாஸ்போர்ட் புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன், பங்குத்தொகை 100 ரூபா மற்றும் நுழைவு கட்டணம் 10 ரூபாய் செலுத்தி உறுப்பினர் ஆகலாம்.

விவசாயிகளும், பொதுமக்களும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர்ந்து கடனுதவி பெறலாம்.

இந்த நிலையில், மாநிலம் முழுவதிலும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கையில் ஆளும் கட்சி அடாவடி செய்கிறது என்று புகார் தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்,ஆர்.சேகர்.

அவர் மேலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் கடனே பிற்காலத்தில் அரசு தள்ளுபடி செய்கிறது என்று சொல்லும் சேகர், கூட்டுறவு சங்கங்கள் திமுகவின் சொத்தா? இவர்களின் செழிப்புக்கு மக்கள் பணத்தை செலவழிப்பதா? கூட்டுறவு சங்கங்களில் வெளிப்படை தேவை. விடியல் அரசு ஊழலுக்கு வழிவிடாமல் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டுமா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.