×

“ஓபிஎஸ்ஸின் துரோகம்… தினகரன் சதியில் பலிகடா” – சசிகலா கம்பேக்!

அமமுக எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்து சசிகலாவின் அரசியல் வருகை அமையும் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார். அதிமுக சார்பில் ஆண்டிப்பட்டி தொகுதியில் மூன்று முறை வெற்றிபெற்றவர் தங்க தமிழ்ச்செல்வன். அங்கு செல்வாக்கான நபர், ஜெயலலிதாவுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் என பிரபலமான அரசியல்வாதி. அதிருப்தியில் அமமுகவில் இணைந்து பின் திமுகவுக்குள் நுழைந்தவர். இவர் தற்போது போடிநாயக்கனூரில் களமிறங்குகிறார். துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை தோற்கடிக்க இவரைத் தவிர யாரும் தகுதியானவராக இருக்க முடியாது என்று நினைத்து
 

அமமுக எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்து சசிகலாவின் அரசியல் வருகை அமையும் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார்.

அதிமுக சார்பில் ஆண்டிப்பட்டி தொகுதியில் மூன்று முறை வெற்றிபெற்றவர் தங்க தமிழ்ச்செல்வன். அங்கு செல்வாக்கான நபர், ஜெயலலிதாவுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் என பிரபலமான அரசியல்வாதி. அதிருப்தியில் அமமுகவில் இணைந்து பின் திமுகவுக்குள் நுழைந்தவர். இவர் தற்போது போடிநாயக்கனூரில் களமிறங்குகிறார். துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை தோற்கடிக்க இவரைத் தவிர யாரும் தகுதியானவராக இருக்க முடியாது என்று நினைத்து ஸ்டாலின் தேர்ந்தெடுத்திருக்கிறார். வெற்றிபெற்றே தீருவேன் என்ற முனைப்பில் இருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். அப்பேட்டியில் அவர், “நான் அதிமுகவில் இருந்தபோதும் சசிகலாவுடன் நேரடி தொடரில் இல்லை. தினகரன் செய்த சதியின் பலிகடாதான் சசிகலா. இந்தத் தேர்தலில் அமமுக எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்து சசிகலாவின் அரசியல் வருகை அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.

சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர்தான் பன்னீர்செல்வம். ஜெயலலிதாவை சசிகலாதான் கொன்றார் என்றும் கூட குற்றஞ்சாட்டினார். இதற்காக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் கூட கூறினார். இதற்குத்தான் அவர் மெரினாவில் தர்ம யுத்தம் நடத்தினார். இத்தனை வருடம் ஆகிவிட்டது. இன்னும் விசாரணை முடியவில்லை. விசாரணை கமிஷன் முன்பும் கூட அவர் ஆஜராகவில்லை. சசிகலா மூலம்தான் பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். ஆனால் அதே சசிகலாவிற்கு பன்னீர்செல்வம் துரோகம் செய்தார். இவரை எல்லாம் எப்படி நம்ப முடியும்” என்றார்.