×

கமலுக்கு பின்னால் ‘டெல்லி’… தினகரனுக்கு ‘அழுத்தம்’

டிடிவி தினகரனுக்கு பாஜகவின் அழுத்தம் கொடுக்கிறது என்ற சந்தேகம் இருப்பதாக தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். அதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை டெல்லியில் உள்ளவர்கள் பின்னால் இருந்து இயக்குகிறார்களோ என்ற சந்தேகமும் இருப்பதாக அவர் தெரிவிட்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் மதச்சார்பற்ற வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காகவே திமுகவை ஆதரித்ததாகக் கூறினார். 2016ஆம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி ஆரம்பித்த உடனே அதிமுகவில் கூட்டணியில் இணைந்து வெற்றிவாகையும் சூடியவர் தமிமுன் அன்சாரி. ஜெயலலிதா இறப்புக்குப்
 

டிடிவி தினகரனுக்கு பாஜகவின் அழுத்தம் கொடுக்கிறது என்ற சந்தேகம் இருப்பதாக தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். அதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை டெல்லியில் உள்ளவர்கள் பின்னால் இருந்து இயக்குகிறார்களோ என்ற சந்தேகமும் இருப்பதாக அவர் தெரிவிட்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் மதச்சார்பற்ற வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காகவே திமுகவை ஆதரித்ததாகக் கூறினார்.

2016ஆம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி ஆரம்பித்த உடனே அதிமுகவில் கூட்டணியில் இணைந்து வெற்றிவாகையும் சூடியவர் தமிமுன் அன்சாரி. ஜெயலலிதா இறப்புக்குப் பின் அதிமுக அரசின் செயல்பாடுகளில் அவருக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டது. குறிப்பாக சிஏஏவுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டதே அவரைக் கோபத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. இதையடுத்து எடப்பாடி அரசை தொடர்ந்து விமர்சித்துவந்தார். சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அதிமுகவை நிராகரித்துவிட்டார்.

தேர்தல் அறிவிப்புக்குப் பின் திமுகவை ஆதரிப்பதாக கடிதம் ஒன்றை அளித்தார். சீட் மறுக்கப்பட்டதால் ஆதரவு கொடுத்த மறுநாளே வாபஸ் பெற்றுக்கொண்டார். பின்னர் ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தார். தேர்தலில் போட்டியிட விட்டாலும் திமுகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை விமர்சனம் செய்துவருகிறார்.