×

ஆட்சிக்காக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உடன் சமரசமாக செல்லாத ஒரே கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம்… தேஜஸ்வி யாதவ்

ஆட்சிக்காக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் சமரசமாக செல்லாத ஒரே மாநில கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் என்று அந்த கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். பீகாரில் கயாவில் மகா கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தேஜஸ்வி யாதவ் பேசுகையில் கூறியதாவது: ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு பிராந்தியமாகும். இப்போது வரை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் சமரசம் செய்து கொள்ளாத ஒரே கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம்.
 

ஆட்சிக்காக பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் சமரசமாக செல்லாத ஒரே மாநில கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் என்று அந்த கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பீகாரில் கயாவில் மகா கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தேஜஸ்வி யாதவ் பேசுகையில் கூறியதாவது: ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு பிராந்தியமாகும். இப்போது வரை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் சமரசம் செய்து கொள்ளாத ஒரே கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம். லாலுஜி எப்போதும் போராடினார்.

தேஜஸ்வி யாதவ்

என் மரியாதையை விற்று, பா.ஜ.க.வுடன் கை கோர்த்தால் நான் முதல்வராகி இருக்கலாம். 2017ல் மகாகூட்டணி உடனான உறவை துண்டித்து பா.ஜ.க.வுடன் மீண்டும் இணைந்து மாநில மக்களை நிதிஷ் குமார் முட்டாளாக்கி விட்டார். மகாகூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். இந்த தேர்தலில் பசி, வேலையின்மை மற்றும் ஊழல் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 28ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.