×

நிதிஷ் குமாரை குறிவைத்து தாக்கும் தேஜஸ்வி யாதவ் மற்றும் சிராக் பஸ்வான்..

பீகாரில், முதல்வர் நிதிஷ் குமாரை குறிவைத்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவும், லோக் ஜன்சக்தி தலைவர் சிராக் பஸ்வானும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், மகா கூட்டணி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நிதிஷ் குமார் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்ந்து போயிருக்கிறார். 15 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், வேலை கொடுப்பதற்கான பணம் எங்கியிருந்து வரும் என்று நிதிஷ் குமார் கேட்கிறார். இந்த
 

பீகாரில், முதல்வர் நிதிஷ் குமாரை குறிவைத்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவும், லோக் ஜன்சக்தி தலைவர் சிராக் பஸ்வானும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், மகா கூட்டணி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நிதிஷ் குமார் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்ந்து போயிருக்கிறார். 15 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், வேலை கொடுப்பதற்கான பணம் எங்கியிருந்து வரும் என்று நிதிஷ் குமார் கேட்கிறார். இந்த மக்கள் (நிதிஷ் குமார் அரசு) செய்த 60 மோசடிகளின் மதிப்பு பீகாரின் பட்ஜெட் பணத்தில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி, அதை அவர்கள் சொல்ல வேண்டும். அந்த பணம் எங்கு சென்றது என தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவ்

லோக் ஜன்சக்தி கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று அந்த கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் வெளியிட்டார். அப்போது முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார். சிராக் பஸ்வான் பேசுகையில், தற்போதைய முதல்வர் மீண்டும் இந்த தேர்தலில் தவறுதலாக வெற்றி பெற்றால், நமது மாநிலம் தோல்வி அடையும். நமது மாநிலம் மீண்டும் அழிவின் விளிம்பில் நிற்கும்.

சிராக் பஸ்வான்

அவர் எவ்வாறு சாதிவாதத்தை ஊக்குவிக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வகுப்புவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நபரின் தலைமையில் பீகார் வளர்ச்சியை கற்பனை செய்வது பொருத்தமானதாக இருக்காது என்று தெரிவித்தார். லோக் ஜன்சக்தி கட்சியின் தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் வெள்ளம் மற்றும் வறட்சியை தடுக்க, மாநிலத்தின் அனைத்து நதிகளும் கால்வாய்களால் இணைக்கபப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டு இருந்தது.