×

தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகள் உண்ணாவிரத போராட்டம்!

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை எதிர்த்து தஞ்சாவூரில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முடிவில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இதற்கு திமுக தலைமையிலான தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. அந்த வகையில், தமிழக பாஜகவும் திமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. கர்நாடகவில் ஆளும் அரசு பாஜக என்றாலும் அதை
 

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை எதிர்த்து தஞ்சாவூரில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முடிவில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இதற்கு திமுக தலைமையிலான தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. அந்த வகையில், தமிழக பாஜகவும் திமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. கர்நாடகவில் ஆளும் அரசு பாஜக என்றாலும் அதை எதிர்த்து போராட தயாராக இருப்பதாக பாஜகவினர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன் படி, இன்று தஞ்சை பனகல் கட்டிடம் அருகே அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தை தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடக்கிவைத்த நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.