விஜய் பக்கம் திரும்பி உள்ள தமிழக அரசியல் களம்- தவெகவில் இணைய காத்துக்கிடக்கும் எம்.எல்.ஏக்கள்
இரண்டு தொகுதியின் வெற்றியை தமிழக வெற்றி கழகம் உறுதி செய்துள்ளது.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 13-ஆவது சுற்று முடிவில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் 46.639 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தாராபுரத்தில் 17 வது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 8,863 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
எதிர்பார்த்தது போலவே தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றியை நோக்கி செல்கிறது. தமிழக வெற்றி கழகத்தை நம்பி வந்த அதிமுகவினரை ஏமாற்றாமல் அவர்களுக்கு வெற்றியை தேடி தந்துள்ளார் முதல்வர் விஜய் . இதேபோன்று அவரை நம்பி வந்த அதிமுகவிற்கு வாய்ப்பளித்து அவர்களை வெற்றி பெற செய்வதாகவும் முதல்வர் விஜய் உத்தரவாதம் அளித்துள்ளார். கிட்டத்தட்ட 15 எம்எல்ஏக்கள் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு இணைவதற்கு தயாராகி உள்ளனர். அதேபோன்று திமுக எம்எல்ஏக்கள் சிலரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழக அரசியல் களம் தற்போது விஜய் பக்கம் திரும்பி உள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி அதிமுக நம்பி இனி கரை சேர முடியாது என்பதால் பெரும்பாலான அவர்கள் தவெகவை நோக்கி நகர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது...