×

EIA எதிராக தமிழக அரசு தீர்மானம் இயற்ற வேண்டும் – டிடிவி தினகரன்

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுச்சூழல் கெட்டுக்கொண்டிருக்கும் காலம் இது. இதில் எட்டுவழிச் சாலை திட்டத்தின் மூலம் பல ஏக்கர் விளைநிலம் அழிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. மக்கள் தீவிரமாக எதிர்த்து அந்தத் திட்டத்தை இன்றுவரை நடைமுறைக்கு கொண்டு வர முடியாமல் தடுத்து வருகின்றனர். மத்திய அரசு EIA எனும் புதிய திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயமும் இயற்கை வளங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய
 

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுச்சூழல் கெட்டுக்கொண்டிருக்கும் காலம் இது. இதில் எட்டுவழிச் சாலை திட்டத்தின் மூலம் பல ஏக்கர் விளைநிலம் அழிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. மக்கள் தீவிரமாக எதிர்த்து அந்தத் திட்டத்தை இன்றுவரை நடைமுறைக்கு கொண்டு வர முடியாமல் தடுத்து வருகின்றனர்.

மத்திய அரசு EIA எனும் புதிய திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயமும் இயற்கை வளங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 ஆம் ஆண்டு வரைவு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது எனப் பலரும் சமூக ஊடகங்களில் கருத்தாகவும் வீடியோவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

#TNRejectsEIA2020, #ScrapEIA ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி எல்லோரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. விரைவில் இது பெரும் அளவில் பேசுப் பொருளாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை (EIA Draft 2020) மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்! இந்த வரைவுக்கு எதிராக தமிழக அமைச்சரவை  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ராணுவத் திட்டங்களுக்கு மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த Strategic என்ற பதத்தைப் பயன்படுத்தி, இனி எந்த திட்டத்தை  வேண்டுமானாலும் அறிவித்துக்  கொள்ளலாம் என்று இந்த  வரைவில் கூறப்பட்டிருக்கிறது. இது,ஜனநாயக நாட்டில் மிகத்தவறான முறையாகிவிடாதா? எனவே, மக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை (EIA Draft 2020) மத்திய அரசு மொத்தமாகத்  திரும்பப்பெற வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி இந்த வரைவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமென்று பழனிசாமி அரசையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.