×

வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியை தமிழக அரசு செலுத்தியதற்கு எதிர்ப்பு! – நீதிமன்றம் சென்ற ஆம் ஆத்மி

ஜெயலலிதா வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியைத் தமிழக அரசு செலுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை கையகப்படுத்தி அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஜெயலலிதா ரூ.36.9 கோடி வருமான வரி பாக்கி வைத்துள்ளதால் அதற்கு வருமான வரித்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசே
 

ஜெயலலிதா வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியைத் தமிழக அரசு செலுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தை கையகப்படுத்தி அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஜெயலலிதா ரூ.36.9 கோடி வருமான வரி பாக்கி வைத்துள்ளதால் அதற்கு வருமான வரித்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசே ரூ.36.9 கோடியை வழங்கி பிரச்னைக்கு தீர்வு கண்டது.


கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவிகள் வழங்க கோரிக்கைவிடுத்த போது நிதிச் சுமையைக் காரணம் காட்டும் அரசு ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்த இவ்வளவு பெரிய தொகையை கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து தமிழக ஆம் ஆத்மி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கில், “வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கி, வருமான வரி பாக்கியைச் செலுத்த என ரூ.69 கோடியை தமிழக அரசு சென்னை மாவட்ட முதன்மை

உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்ி உள்ளது. ஏற்கனவே, ஜெயலலிதாவுக்காக ரூ.50.8 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடியால் இருக்கும் தமிழக அரசு, மக்கள் வரிப் பணத்தை ஜெயலலிதாவின் வரி பாக்கிக்கு செலவிடுவது தவறு” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதை தனியாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்குடன் இதையும் சேர்த்து விசாரிக்க நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தினர்.