×

“ஆதரவாளர்களுக்கு சீட் வேணும்” : ஆட்டம் காணும் இரட்டை தலைமை!

அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்வதில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு என தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவாளர்களுக்கான தொகுதிகள் வேட்பாளர்களை ஒதுக்கீடு செய்வதில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கருத்து வேறுபாடால் ஓபிஎஸ் பங்கேற்ற மகளிர் தின விழாவில் இபிஎஸ் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. தங்களது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில்
 

அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்வதில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு என தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவாளர்களுக்கான தொகுதிகள் வேட்பாளர்களை ஒதுக்கீடு செய்வதில் உடன்பாடு ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கருத்து வேறுபாடால் ஓபிஎஸ் பங்கேற்ற மகளிர் தின விழாவில் இபிஎஸ் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. தங்களது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் .வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாம்.

அத்துடன் முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர் தங்கமணி ,வேலுமணி உடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். உதாரணமாக 160 தொகுதியில் அதிமுக போட்டியிடவுள்ளதாக இருந்தால் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 80 பேராக போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டது. வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல் என்பது தேர்தல் நேரத்தில் ஒருகட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.