மீண்டும் பாஜக பக்கம் நகரும் ஆதரவாளர்கள்- அப்செட்டில் அண்ணாமலை
பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலையிடம் தஞ்சம் அடைந்த சிலர் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய பின்னர் அரசியலுக்கு வந்த அண்ணாமலை, குறுகிய காலத்திலேயே தமிழக பாஜக தலைவராக உயர்ந்தார். திமுக அரசை கடுமையாக விமர்சித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு ஆதரவை உருவாக்கினார். அதே நேரத்தில் அதிமுக மீதான அவரது விமர்சனங்கள் கூட்டணிக்குள் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இதனால் அவர் மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்காமல் உறுப்பினராகவே நீடித்து வந்தார்.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி தனி அமைப்பை தொடங்கினார். தொடக்கத்தில் அவரது அமைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்பட்டாலும், மூன்று மாதங்கள் கடந்தும் உறுப்பினர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியில் அண்ணாமலை கட்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறதால் அவருடன் அ சென்ற சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீண்டும் பாஜகவை நோக்கி திரும்பி வருவதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான பல நிர்வாகிகள் மீண்டும் பாஜகவில் இணைவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கட்சிக்கு திரும்பி வருபவர்களுக்கு உரிய முக்கியத்துவமும், அவர்கள் முன்பு வகித்த பொறுப்புகளும் வழங்கப்படும் என நயினார் தரப்பு உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாஜக முகாமில் உற்சாகம் அடைந்துள்ள நிலையில், அண்ணாமலைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.