×

‘சித்தப்பு’க்காக டார்ச்லைட்டுடன் களமிறங்கிய சுஹாசினி

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனுக்காக ஆதரவாக நடிகை சுஹாசினி பரப்புரை மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ளது. இதனால் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக – அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில்ஆட்சி செய்து வரும் திமுக அதிமுகவை எதிர்த்து கமல் ஹாசன் களமிறங்கியுள்ளார். 234 தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி, இந்தியஜனநாயக கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கிட்டத்தட்ட 150 தொகுதிகளுக்கு மேலாக
 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனுக்காக ஆதரவாக நடிகை சுஹாசினி பரப்புரை மேற்கொண்டார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ளது. இதனால் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக – அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில்ஆட்சி செய்து வரும் திமுக அதிமுகவை எதிர்த்து கமல் ஹாசன் களமிறங்கியுள்ளார். 234 தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி, இந்தியஜனநாயக கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கிட்டத்தட்ட 150 தொகுதிகளுக்கு மேலாக மக்கள் நீதி மய்யம் மூலம் களம் காண்கிறார் கமல் ஹாசன். மயிலாப்பூர், ஆலந்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் கமல் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் கோவையில் முகாமிட்டுள்ள அவர் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக அவரின் அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி களமிறங்கியுள்ளார். சுக்கிரவார்பேட்டை, டி.கே.மார்க்கெட், சின்னஇலை தெரு, கிருஷ்ணப்பா குடியிருப்பு,உள்ளிட்ட பல இடங்களில் தனது சித்தப்பா கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் லைட்டை கையில் எடுத்து சென்று வீதிவீதியாக வாகு சேகரிப்பில் ஈடுபட்டார்.