×

சசிகலாவுக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு : ஆணையத்தில் புகார்!

சிறையில் இருந்து விடுதலையாகவிருந்த சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது தொடர்பாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா வரும் ஜன.27ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாகவிருக்கிறார். இதனை சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அவர், பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததால் மூச்சுத்திணறல்
 

சிறையில் இருந்து விடுதலையாகவிருந்த சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது தொடர்பாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா வரும் ஜன.27ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாகவிருக்கிறார். இதனை சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அவர், பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், சசிகலா அவசரசி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் முக்கிய புள்ளியான சசிகலாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நிலை குறைவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். சசிகலாவை கேரளா அல்லது புதுச்சேரி மாநிலத்திற்கு மாற்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.