×

“குமரி தேவியை விட மீனாட்சிக்கு சக்தி அதிகம்ண்ணே” – வசந்தகுமார் குறித்து சு. வெங்கடேசன் உருக்கம்!

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் காங்கிரஸ் முன்னாள் எம்பி வசந்தகுமார். கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த தலைவர்களில் அவரும் ஒருவர். இதனால் கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனோடு சேர்த்து கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு போட்டியிட பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்தும் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளனர். இச்சூழலில் இன்று விஜய் வசந்த் மதுரை எம்பி சு. வெங்கடேசனை சந்தித்து
 

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் காங்கிரஸ் முன்னாள் எம்பி வசந்தகுமார். கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த தலைவர்களில் அவரும் ஒருவர். இதனால் கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனோடு சேர்த்து கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு போட்டியிட பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்தும் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.

இச்சூழலில் இன்று விஜய் வசந்த் மதுரை எம்பி சு. வெங்கடேசனை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். அந்தப் புகைப்படத்தை இணைத்து தனக்கும் வசந்தகுமாருக்கும் இடையே மக்களவையில் நிகழ்ந்த உருக்கமான உரையாடலை வெங்கடேசன் நினைவுகூர்ந்துள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள வெங்கடேசன், “நாடாளுமன்ற வளாகத்தில் என்னைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அண்ணன் வசந்தகுமார் கேட்கும் கேள்வி “பூஜ்ஜிய நேர விவாதத்தில் அதிகமாக பேசியது நீங்களா? நானா? “. “குமரி தேவியை விட மீனாட்சி அன்னைக்கு சக்தி அதிகம்ண்ணே” என்று அவரது மொழியிலேயே நான் பதில் சொல்வேன்.

பதிலைக் கேட்டு அவருக்கே உரித்தான மகிழ்ச்சி பொங்கிய சிரிப்போடு என்னைக் கடந்து செல்வார். இன்று அவர் நம்மிடம் இல்லை. காலம் பறித்துக் கொண்டது. அதே கன்னியாகுமரி தொகுதியில் அவரது மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு கை குறைந்தாலும் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நாடாளுமன்றம் ஒவ்வொரு நிமிடமும் நாட்டுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. விஜய் வசந்த் வெற்றி மிகமிக முக்கியமானது. வாருங்கள் விஜய் மக்களவையிலே சந்திப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.